Title of the document
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள கபிலர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் கடந்த நவம்பரில் தலைமையாசிரியராக அருள்ஜோதி என்பவர் பொறுப்பேற்றார். இவர், பணியில் சேர்ந்த நாள் முதல் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் அளவிற்கு அதிகமாக முடி வைத்திருந்த பிளஸ் ஒன், பிளஸ்டூ மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் கடந்த மூன்று நாட்களாக இரண்டு சிகை அலங்கார கலைஞர்களை பள்ளிக்கே வரவழைத்து முடி திருத்தம் செய்துள்ளார். 

பள்ளி தலைமை ஆசிரியரின், இத்தகைய செயலுக்கு பெற்றோர், மற்றும் சக ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், சிகை அலங்காரம் மேற்கொள்ளப்படும் என்றும் தலைமை ஆசிரியர் அருள்ஜோதி தெரிவித்தார். 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post