Title of the document
IMG-20200127-WA0007

கிராம சபை கூட்டத்தில் அரசுப்பள்ளி பள்ளி மாணவா் சேர்க்கைக்கான தீர்மானம்:

71 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் திம்மநத்தம் ஊராட்சி ஒன்றிய கிராம சபை கூட்டத்தில் சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளி மாணவா் சேர்க்கை தொடா்பாக பள்ளி தலைமையாசிரியா் நவநீதகிருஷ்ணன் உரையாற்றினாா். சுளிஒச்சான்பட்டி கிராமத்தின் சுற்று வட்டார பகுதியிலுள்ள அனைத்து குழந்தைகளையும் தனியாா் பள்ளிகளை விட சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு இயங்கும் சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளியில் சேர்த்து தரமான இலவசக் கல்வியை பெற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்ததையடுத்து ஊா்ப்பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாணவா் சேர்க்கைக்கு இது ஒரு முன்மாதிரியான புதிய முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم