ஏற்கனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் 01 . 08 . 2019 நிலவரப்படி கணக்கிட்டு வைக்கப்பட்டுள்ள பணியாளர் நிர்ணயம் சார்ந்த கோப்புகளை அந்தந்த மாவட்டங்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள நாளில் தவறாது சார்ந்த பிரிவின் கண்காணிப்பாளர் / உதவியாளர்கள் நேரில் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .நடப்பு கல்வியாண்டில் 01.08.2019 நிலவரப்படியான ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி பணியாளர் நிர்ணயம் சார்ந்த பணிகள் Online மூலம் EMIS இணையதள வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.
அதற்கு முன்னர் முன்னேற்பாடாக பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டு அனைத்து விபரங்களையும் தயாராக வைத்திருக்க எதுவாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment