Title of the document
அரையாண்டு தேர்வு தொடங்கும் நிலையில் 9வகுப்பு தமிழ் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானதாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நாளை (டிசம்பர் 13) முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது

இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கேள்வித்தாள் தயாரிக்கப்படுவது வழக்கம். அப்படி தயாரிக்கப்படும் கேள்வித்தாள்கள், பள்ளி கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சீலிட்டு அனுப்பி வைக்கப்படும். அவற்றை பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் அளிப்பார்கள்.

நாளை நடைபெற உள்ள 9வகுப்புகளுக்கு தமிழ் தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியான புகார் எழுந்துள்ளது.



இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான கேள்வித்தாள், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கானது என தகவல் பரவிய நிலையில், அதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதையடுத்து எந்த மாவட்டத்தில் இருந்து வெளியான கேள்வித்தாள் என்பது குறித்தும், உண்மையிலேயே கல்வித்துறை அச்சடித்த கேள்வித்தாளா அல்லது யாரேனும் வேண்டுமென்றே பரப்பிய தவறான தகவலா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரித்து வருகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post