பி.எட்., தேர்ச்சி 80 சதவீதம்; 'டெட்' தேர்ச்சி 0.8 சதவீதம்! கவனிக்குமா கல்வியியல் பல்கலை

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
20191223071538

தமிழகத்தில் பி.எட்., தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி பெறுவோர் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) 0.8 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால் பள்ளி கல்வி போல் கல்வியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்' என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.கல்வியியல் படிப்பிற்கு சென்னையில் மட்டுமே பல்கலை உள்ளது.

இதன் கீழ் 700க்கும் மேல் அரசு மற்றும் தனியார் பி.எட்., மற்றும் எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன. தமிழகத்தில் ஐந்தரை லட்சம் பேர் பி.எட்., தகுதியுடன் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் பி.எட்., முடிக்கின்றனர்.கட்டாயக் கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.,) அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் அதன் டெட் தேர்ச்சி ஒருசதவீதத்தை கூட எட்டாதது கவலையளிக்கிறது. டெட் தாள் இரண்டை 3,79,733 பேர் எழுதி324 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவேடெட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., பாடத் திட்டத்தை தரமானதாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வியாளர், கல்லுாரி நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை புதிய துணைவேந்தராக பஞ்சநாதம் தற்போது பொறுப்பேற்றுள்ளார். கல்வி தரத்தை உயர்த்துவது உட்பட பல சவால் அவருக்கு உள்ளது. குறிப்பாக இதுவரை வெளி நபர்களால் கல்லுாரிகளுக்கும், துணைவேந்தருக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. இதை குறைக்க வேண்டும்.மேலும் ஒரு பல்கலைக்கு 700க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன என்பது அதிகபட்சம். அண்ணா பல்கலையை போல் இதற்கும் மண்டல மையங்கள் ஏற்படுத்தி கல்லுாரிகளைகண்காணிக்க வேண்டும்.பள்ளிக் கல்வி போல் பாடத் திட்டங்களை மாற்றம் செய்து, டெட்தேர்வுக்குரிய பாடங்களை சேர்க்க வேண்டும்.

தேர்வையும், கல்லுாரிகள் தொடர் அங்கீகாரம் வழங்குதலையும் முறைப்படுத்தி அதில் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.உதவி, துணை பதிவாளர்களை தவிர்த்துவிட்டு 'அவுட் சோர்ஸ்' என்ற பெயரில் வெளிநபர்களுக்கு அலுவல் பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும், என்றனர்.

Post a Comment

0 Comments