உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 2170 ஆசிரியர்களுக்கு மெமோ

Join Our KalviNews Telegram Group - Click Here
தேர்தல் பயிற்சி வகுப்பு தொடர்பான அறிவிப்பு கடிதம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சார்வு செய்யப்பட்டு முதல் கட்ட தேர்தல் பயிற்சி 15.12.2019 அன்று அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றது .

இப்பயிற்சிக்கு மாவட்ட அளவில் 2170 பயிற்சியாளர்கள் வருகை புரியவில்லை எனவும் , பயிற்சிக்கு வருகை புரியாத அலுவலர்களின் விளக்கத்தினைப் பெற்று அனுப்பவும் அந்த அலுவலர்களை 18.12.2019 அன்று காலை 10.00 மணிக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆஜர்படுத்தவும் சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே ,  தேர்தல் பயிற்சிக்கு வருகை புரியாத வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய விளக்கத்தினை சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நாளை செவ்வாய்கிழமை ( 17.12 .2019 ) அன்று தெரிவித்து , புதன்கிழமை ( 18.12.2019 ) அன்று காலை 10 . 00 மணிக்கு இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தங்களுடைய வருகையை பதிவு செய்திட அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் இணைப்பில் கண்டுள்ள தேர்தல் பயிற்சிக்கு வருகை புரியாத ஆசிரியர்களிடம் நாளை செவ்வாய்கிழமை ( 17.12.2019 ) உரிய விளக்கத்தினை பெற்று அதனைத் தொகுத்து மாலைக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்திடவும் , புதன்கிழமை ( 18.12.2019 ) அன்று காலை 10.00 மணிக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவர்களுடைய வருகையை பதிவு செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது .

              - முதன்மைக் கல்வி அலுவலர்                                    சேலம் 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்