Title of the document
 NMMS தேர்வு மையம் தொலை தூரத்தில் ஒதுக்கி  குளறுபடி - இதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல்

Image result for NMMS

இது குறித்து  பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில் :





விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் கல்வி மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்தில், அமைந்துள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ வெங்கட வரதா நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு(NMMS) தேர்வுக்கான விண்ணப்பத்தை உரிய நேரத்தில் இணையவழி மூலம் அனுப்பி இருந்தோம்.

அதன்பொருட்டு தற்பொழுது மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு எங்களுக்கு இணையவழி மூலம் கிடைக்கப்பெற்றது. அதில் வேறு ஒரு கல்வி (செஞ்சி) மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பெண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைத்துள்ளது....

எங்கள் பள்ளிக்கும் தேர்வு மைய பள்ளிக்கும் பேருந்து பயணம் என்பது 3 மணி நேரம் ஆகும். சுமார் 85 கிலோமீட்டர்..,இது எங்களுக்கு மட்டுமா அல்லது எல்லா பள்ளி மாணவர்களுக்கும் இதுபோன்று நீண்டதொரு பயணத்தின் பின் தேர்வு எழுத அனுமதிக்கப் படுகிறார்களா? என்பது தெரியவில்லை....


மாணவர்கள் இவ்வளவு தூரம் சென்று தேர்வு எழுத வேண்டும் என பெற்றோர் இடத்திலே தெரிவித்தபோது,

அப்படி ஒரு தேர்வுக்கு நாங்கள் அனுப்ப முடியாது.என்று திட்டவட்டமாக மறுக்கிறார்கள் கட்டாயப்படுத்தி மாணவர்களை அழைத்துச் செல்வதா..... ?பெற்றோர் விருப்பத்திற்கு விடுவதா.....?
 புரியவில்லை

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அருகிலேயே தேர்வு மையங்கள் மாற்றி  அமைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post