அரசு பள்ளிகளுக்கு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இருந்து நிதி - தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு - முழு விபரம் !!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடமிருந்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஆன்லைனில் நிதி திரட்ட உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை முதல்வர் கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்திய நிறுவனச் சட்டத்தின்படி பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் 2 சதவீத தொகையை, சமூக பொறுப்பு செயல்பாடுகளுக்காக (சிஎஸ்ஆர்) பயன்படுத்த வேண்டும்.

பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளை தேர்வுசெய்து அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி செய்கின்றனர். இத்தகைய நிறுவனங்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உதவும் வகையில், எளிமையான நம்பகமானஇணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.


அதேபோல் அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களுக்கென்று எளிய, நம்பகத்தன்மை கொண்ட இணையவழித்தடமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அரசுப் பள்ளிகளுக்கு அவர்கள் செய்த உதவிகளும் இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. அதேபோல் அரசுப் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக உதவும் தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் தகவல் தொகுப்பையும் பெற முடியவில்லை.


இந்த குறைகளை களையும் வகையில், பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு செயல்பாடுகளின் பங்களிப்பையும், தன்னார்வலர்களின் பங்களிப்பையும் பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்தம் வகையில் ஆன்லைனில் நிதி திரட்டும் இணையதளத்தை (https://contribute.tnschools.gov.in) பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியுள்ளது. இப்புதிய இணையதளம் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதால், அதிக எண்ணிகையிலான தன்னார் வலர்களும், நிறுவனங்களும் ஆர்வத்துடன் பங்களிக்க முன்வருவார்கள்.

வெளிப்படைத்தன்மை காரணமாக அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு பொதுமக்களின் பங்களிப்பும் அதிகரிக்கும். இதன்மூலம் 2 சதவீதம் சிஎஸ்ஆர் நிதியை பெறவும் வாய்ப்புகள் ஏற்படும். நன்கொடைகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படுவதால் தனிநபர்களும், நிறுவனங்களும் இத்தளத்தின் மூலமாக அதிக அளவில் தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வருவர். மேலும், அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களின் தகவல் தொகுப்பையும் உருவாக்க முடியும். இந்த புதிய இணையதளத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பாடநூல்கழகத் தலைவர் பா.வளர்மதி,தலைமைச் செயலர் கே.சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்.சுடலைக்கண்ணன், கூடுதல் திட்ட இயக்குநர்கள் என்.வெங்கடேஷ், பெ.குப்புசாமி,பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த பொதுமக்களிடம் நிதி திரட்ட தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை (‌h‌t‌t‌p‌s://​c‌o‌n‌t‌r‌i​b‌u‌t‌e.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n) முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:- பெரிய தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு சதவீதத் தொகையை சமூகப் பொறுப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டுமென இந்திய கம்பெனிகள் சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளைத் தோ்ந்தெடுத்து அந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி செய்கின்றன.

இத்தகைய நிறுவனங்களுக்கும், ஆா்வலா்களுக்கும் உதவிடும் வகையில் எளிமையான, நம்பகமான இணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனைக் களையும் வகையிலும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் இணையவழி நிதி திரட்டும் வசதியை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது. இணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடா்பான விவரங்களை பொது மக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இணையவழியில் திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகமானது தொடா்பு அலுவலகமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் பா.வளா்மதி, தலைமைச் செயலாளா் க.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநா் ஆா்.சுடலைக்கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

அரசு பள்ளிகளை மேம்படுத்த, நிதி திரட்டும் இணையதளத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார். இந்திய நிறுவன சட்டம், 2019ன்படி, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அவற்றின் லாபத்தில், இரண்டு சதவீத தொகையை, சமூக பொறுப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

பெரும்பாலான நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ, நேரடியாகவோ, பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நிதி உதவி செய்கின்றன. இத்தகைய நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உதவும் வகையில், இணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ, இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.அதேபோல், அரசு பள்ளிகளில் படித்து, தற்போது நல்ல நிலையில் உள்ள, முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த, அரசு பள்ளிகளை மேம்படுத்த, உதவி செய்யும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.அவர்களுக்கென்று எளிய இணைய வழித்தடம் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அவர்கள் செய்த உதவிகளும், வெளிச்சத்திற்கு வரவில்லை.


இக்குறைகளை களையவும், பெரு நிறுவனங்களின் பங்களிப்பையும், தன்னார்வலர்களின் பங்களிப்பையும் பெற்று, அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், இணையவழி நிதி திரட்டும் முகமையாக, contribute.tnschools.gov.in என்ற இணையதளத்தை, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உருவாக்கி உள்ளது.இதனால், பொது மக்கள் பங்களிப்பு அதிகரிக்கும். நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதால், தனி நபர்களும், நிறுவனங்களும், இந்த தளத்தின் வழியே, அதிக அளவில், தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வருவர். இந்நிதி, அதற்கென துவக்கப்பட்டுள்ள, தனி வங்கி கணக்கில் பெறப்படும்.

நிதி தொடர்பான விபரங்களை, பொது மக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாக செயல்படும். அதன் பொருளாளரும், செயலரும், தொடர்பு அலுவலர்களாக இருந்து, நிதி மேலாண்மை செய்வர்.இணையதளம் துவக்க நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் பங்கேற்றனர்.


தமிழகத்திற்கு தேசிய விருது!இணைய வழி கற்றலுக்கு உதவும், 'DIKSHA' என்ற இணையதளத்தை, 4.92 கோடி பேர், 'ஸ்கேன்' செய்தும், 2.39 கோடி பேர், தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தி உள்ளனர்.திக்சா செயலியை பயன்படுத்துவதில், சிறந்த நான்கு மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. அதை பாராட்டி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில், தேசிய விருது, தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இவ்விருதை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், நேற்று முதல்வரிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.

School needs - EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்