கலந்தாய்வு முடிந்து நான்கைந்து நாட்கள் ஆன பிறகும் ஆசிரியர்கள் இன்னும் பணியில் இருந்து விடுவிக்கப்படாததால் இரண்டு நாட்களாக அலைந்து கொண்டுள்ளனர்.
அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது வட மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற்று செல்வதால் கல்விப்பணிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே அதற்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் அல்லது இந்த கல்வியாண்டு இறுதிவரை பணியாற்ற வேண்டி வரலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பணிமாறுதல் ஆணை வாங்கிய பின்னரும் மனஉளைச்சலில் இருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق