பாதுகாப்பு இல்லாத வகுப்பறைகளை இடிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
வேலுார் மாவட்டத்தில், 23 பள்ளிகளில், பாதுகாப்பு இல்லாத, 115 வகுப்பறைகளை இடிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடிந்து விழும் நிலையிலுள்ள, பாதுகாப்பற்ற கட்டடங்கள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது.இதுதொடர்பாக, வேலுார் மாவட்டத்தில், பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதில், 23 பள்ளி வளாகங்களில், சிதிலமடைந்த நிலையிலுள்ள,115 வகுப்பறைகள் பாதுகாப்பு இல்லாதது என, தெரிய வந்தது.

இதுதொடர்பாக, வேலுார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்பினார். இதையடுத்து, பாதுகாப்பு இல்லாத, 115 வகுப்பறைகளை இடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது

Post a Comment

1 Comments

  1. Sir I am a primary school teacher told repeatedly my correspondent and the block elementary educational officer that part of our school is having very big cracks they never responded to my concern but as soon as this news came.sn engineer came and told it is very risky any time it may fell the classroom this is super action may God bless them who helped me and my students indirectly by passing such irders

    ReplyDelete