பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21.11.19

Join Our KalviNews Telegram Group - Click Here
திருக்குறள்

அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:325

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

விளக்கம்:

உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

பழமொழி

Shun the wicked, as you would the plague

 துஷ்டனைக் கண்டால் தூர விலகு

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

நீங்கள் நல்லவர் என்றால் மற்றவர்களுக்கும் நீங்கள் நல்லவர் தான்.சமூகத்திற்கும் நல்ல செயல்களை மட்டுமே செய்பவர் தான்.

___பிராங்க்ளின்

பொது அறிவு

இன்று உலக தொலைக்காட்சி தினம் மற்றும் உலக மீன்பிடி தினம்

1.தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் யார்?

 ஜே.எல்.பைர்ட்(1926)

2.மீன்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

ஜப்பான்.

3. நீலப் புரட்சி என்பது எதனைக் குறிக்கிறது ?

 நீலப் புரட்சி என்பது அதிக அளவு மீன் உற்பத்தியை குறிக்கும்

*English words & meanings*

 Laryngology – study of larynx. தொண்டை மற்றும் குரல்வளை குறித்த படிப்பு.

 Lactic - relating to or obtained from milk. பால்சார்ந்த

*ஆரோக்ய வாழ்வு*

கிராம்பை அவ்வப்போது கடித்துவந்தால் தலைவலிக்கு சுகமாக இருக்கும்.

*Some important  abbreviations for students*

HP  - horsepower

h&c - hot and cold

*நீதிக்கதை*

செய்நன்றி மறவேல்

ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.

மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.

அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.

ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.

தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.

*வியாழன்*
*அறிவியல் & கணினி*

அறிவோம் அறிவியல்

Boat with baking powder

தேவையான பொருட்கள் :
ஒரு பிளாஸ்டிக் குப்பி, உறிஞ்சு குழல் (straw), ஆப்ப சோடா அல்லது சோடா மாவு, சிவப்பு நிற உணவு கலர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர்.

செய்முறை :
குப்பியில் உள்ள மூடியில் சிறு துளை இட்டு அதில் உறிஞ்சு குழலை சொருகவும். குப்பியின் உள்ளே ஆப்ப சோடா போட்டு அதனுடன் சிவப்பு உணவு கலரை சேர்க்கவும்  வினிகரை ஊற்றவும். மூடியை இறுக்க மூடி நீர் நிரம்பிய தொட்டியில் இடவும். தற்போது குப்பி ஒரு ஜெட் படகு போல செல்வதைக் காணலாம்.

அறிவியல் : ஆப்ப சோடா வினிகருடன் வினை புரிந்து CO2 உற்பத்தி செய்யும். இது அதிக விசையுடன் உறிஞ்சு குழல் வழியாக வெளியேறும். இந்த விசை குப்பியை அதி வேகத்தில் அங்கும் இங்கும் இயங்க வைக்கும். சிவப்பு வர்ணம் தொட்டியில் உள்ள நீரில் இருந்து வேறுபடுத்தி அறிய சேர்க்கப் படுகிறது.

கணினி சூழ் உலகு

7-ஆம் வகுப்

இன்றைய செய்திகள்

21.11.19

* இரண்டாம் உலகப் போரின் மையப் பேசுபொருளாக விளங்கிய நாஜித் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் பிறந்த கட்டடத்தை காவல்  நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.

* குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனையடுத்து குற்றாலம் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

*நாமக்கல்லில், பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில், 2 கிலோ நெகிழிக்கு ஒரு கிலோ அரிசி மற்றும் காய்கறி வழங்கும் விழிப்புணா்வு முகாம்  நடைபெற்றது.

* யூரோ 2020 கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு டென்மாா்க், ஸ்விட்சா்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

* தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் எல். சிவராம கிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார்.

Today's Headlines

🌸The Austrian government has decided to convert the birth place where  Nazi leader Adolf Hitler who was the central figure of World War II, into a police station.

 🌸Heavy rains in the Courtallam area caused floods in the Courtallam falls .Bathing was banned due to this .

 🌸 At Namakkal, Green Home Organization  held an awareness camp where they  provide 1 kg of rice and vegetable for 2 kg  of plastics.

 🌸 Denmark and Switzerland teams were qualified for the final of Euro 2020 Football Tournament.

   🌸Mr.Sivarama Krishnan, the Former cricketer of Tamil Nadu is the new chief selector of the Indian selection committee. 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்