Title of the document

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
19-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்-977
அதிகாரம் : பெருமை

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

மு.வ உரை:

சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.கருணாநிதி  உரை:

சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.

சாலமன் பாப்பையா உரை:

பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நமது வாழ்க்கையில் வெற்றியடைய ஒரே வழியான எளிமையையும், கடின உழைப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
  - அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள்:

ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான்

.

உண்மையான பொருள்:

கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

1. cotton - பருத்தி
2. noise - சத்தம்
3. spread - பரவல்
4. arrange - ஏற்பாடு✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. ஒலிம்பிக் போட்டி நடந்த முதல் ஆசிய நாடு எது ?

 ஜப்பான்

2. அன்னாசிப் பழத்தில்  உள்ள இரு அமிலங்கள் எவை ?

 சிட்ரிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலம்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அழகான மண்டபம் ஒருவர் கண் பட்டு உடைந்ததாம். - அது எது ?

 தேன் கூடு

2. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல : சூடு கொடுக்கும், தீ அல்ல : பளபளக்கும் தங்கம் அல்ல : - அது என்ன ?

 சூரியன்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

உளுந்து

பயன்கள்

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.உளுந்து வடை பசியை போக்குவதுடன் பித்தத்தைக் குறைக்கும்.

குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்டலி கொடுப்பது நல்லது. எலும்புகள் வலுப்பெறும்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

செல்வம் நம்மோடு இருக்கட்டும்

அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் செல்வம் என்ற பெயருள்ள ஒருவன் அக்பரின் அரண்மனை பாதுகாவலனாக பணிபுரிந்தான்.

ஓர் நாள் செல்வம் ஒரு சிறு தவறு செய்ததற்காக அக்பர் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார். செல்வமோ ஏழ்மை நிலை குடும்பத்தைச்சேர்ந்தவன்.

செல்வம் பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி தனக்கு மீண்டும் அரண்மனையில் வேலை அளிக்கும்படி வேண்டினான்.

பீர்பால் அவனுடைய ஏழ்மை நிலையை எண்ணி மனம் இரங்கி, செல்வத்திடம் நாளை அதிகாலையில் அரண்மனைக்கு சென்று செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன், இல்லாவிடில் போகிறேன் என்று மட்டும் சொல் எனக்கூறித் தைரியம் கொடுத்து அனுப்பினார்.

செல்வமும் மறுநாள் அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று, செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன் இல்லாவிடில் போகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தான். அரசர் அக்பருக்கு இச்செய்தி எட்டியது.

உடனே அக்பர், தலைவாசலில் நின்று கொண்டிருந்த செல்வத்தை உள்ளே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

செல்வம் மன்னரை பணிவுடன் வணங்கிவிட்டு அரண்மனை வாயிலில் கூறியதை மீண்டும் கூறினான்.

அக்பர் புன்னகை புரிந்தவாறு, செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்! என்று சொல்லி, அவனை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார்.

அரண்மனையில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். பீர்பாலின் மதியூகத்தினால் தான் இது நிகழ்ந்தது என்பதை அறிந்த அக்பர் உண்மையில் மனமகிழ்ச்சியடைந்தார்.

நீதி :
செல்வம் வருவதை அனைவரும் விரும்புவர்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஒரு புதிய ஆக்சிஜன் மர்மத்தைக் கண்டறிந்துள்ளது.

🔮2018-19ல் 2 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் மேல் படிப்பு படிக்க அமெரிக்கா சென்று உள்ளனர். இது சீனாவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

🔮பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக வரும் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 29-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

🔮சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு, மும்பை அணிகள் வெற்றிபெற்றன.

🔮ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் தகுதி.


🔮நாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவை முக்கிய பங்காற்றி வருகிறது: 250-வது கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரை
HEADLINES

🔮Justice Sharad Arvind Bobde takes oath as next CJI.

🔮Cartosat-3 slated for November 25 launch with 13 U.S. nanosatellites.

🔮Ronaldo moves onto 99 as Portugal qualify for Euro 2020.

🔮Electric garbage collection vehicles make TN villagers curious, but authorities act 'secretive'.

🔮Gotabaya Rajapaksa sworn in as Sri Lankan President.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post