Title of the document

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்ற நிலையில் அத்தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 2,340 பணியிடங்களை நிரப்பிடும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடைபெற்றது. இதில், சுமார் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

தற்போது இத்தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை ஆசிரியர் தேர்வு வாரியத்தின்http://trb.tn.nic.in/PG_2019/PG2019_RESULT/msg1.htm என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

மதிப்பெண் விபரங்கள் பாடங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், தாவரவியல், புவியியல், வணிகவியல், அரசியல், இந்திய கலாச்சாரம், உடற்கல்வி, உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், ஹோம் சைன்ஸ் என ஒவ்வொன்றும் தனித்தனி மதிப்பெண் விபரங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது துறை சார்ந்த பாடத்தை தேர்வு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post