Title of the document

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி பதவி உயர்விற்கான 1579 ஆசிரியர்களை உள்ளடக்கிய பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்துள்ளது.

அதற்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதில் துறைரீதியான நடவடிக்கைக்கு ஆசிரியர் ஆளாகியிருக்கக் கூடாது என்பது முக்கியமான விதியாகும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 300 க்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதேபோல் முதுகலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post