Title of the document


அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள பள்ளி பாடப் புத்தகங்களை தேர்வர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் ஆண்டுதோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் வழி, ஆங்கில வழி ஆகியவற்றுக்கான அனைத்து பாடப்புத்தகங்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அதிகம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுக்காக தங்களை தயார்படுத்தும் தேர்வர்கள் அதிகளவில் தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களை ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post