Title of the document


ஜியோ மொபைலில் இருந்து மற்ற நிறுவனங்களின் மொபைல் போனுக்கு அழைப்பு விடுத்தால் இனிமேல் 6 பைசா கட்டணம் கட்டவேண்டும் என நேற்று ஜியோ அறிவித்தது

இந்த அறிவிப்பால் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த அறிவிப்பை வாடிக்கையாளர்களுக்கு சுமக்க வேண்டும் என்பதற்காக அறிவிக்கவில்லை என்றும் ஏர்டெல் நிறுவனத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே அறிவித்துள்ளதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது

அதாவது ஜியோ போனில் இருந்து ஏர்டெல் மொபைல்களுக்கு செல்லும் அழைப்புக்காக ஜியோ ஒவ்வொரு ஆண்டும் 13,500 கோடி ரூபாய் ஏர்டெல் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது. இந்த கட்டணத்தை வைத்தே ஏர்டெல் நிறுவனம், ஜியோ நிறுவனத்திற்கு எதிராக சில சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது நம்முடைய காசை வாங்கி நமக்கே ஆப்பு வைக்கும் ஏர்டெல்லுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 6 பைசா கட்டணத்தை ஜியோ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த அறிவிப்பு வெளியானவுடன் பெரும்பாலான ஜியோ வாடிக்கையாளர்கள், ஏர்டெல் மொபைல் வைத்திருக்கும் தனது நண்பர்கள் உறவினர்களிடம் ஜியோ சிம் வாங்குமாறு கோரிக்கை வைப்பார்கள் என்றும், இதனால் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஜியோ நிறுவனம் கருதுகிறது. இதனால் தனக்கு ஒரே போட்டியாக இருக்கும் ஏர்டெல்லை ஒழிக்கவே ஜியோ இந்த 6 பைசா கட்டணத்தை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் 6 பைசா கட்டணத்திற்கு பதில் இண்டர்நெட் டேட்டா கொடுப்பதாக ஜியோ அறிவித்துள்ளதால், ஏர்டெல் உள்பட மற்ற மொபைல்களுக்கு பேச வேண்டும் என்றால் வாட்ஸ் அப் காலில் இருந்து பேசிக்கொள்ளுங்கள் என்பதையும் ஜியோ சொல்லாமல் சொல்கிறது என்றும் கூறப்படுகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post