5 தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை ( 30.10.2019 ) விடுமுறை !!

Join Our KalviNews Telegram Group - Click Here
 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை ( 30.10.2019 ) விடுமுறை !! 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை ( 30.10.2019 ) விடுமுறை !!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு நாளை(30-10-2019) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜை கொண்டாடப்படுகிறது.

30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறுவதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோல தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.