Title of the document

விஞ்ஞானத்தில் சிறந்து விளங் கும் 100 அரசுப் பள்ளி மாணவர் கள் மற்றும் 100 கல்லூரி மாணவர் கள் இஸ்ரோவை பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.

உலக விண்வெளி வாரத்தை யொட்டி தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஹரிகோட்டா வில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையம், கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து 3 நாட்கள் இஸ்ரோ விண்வெளி கண்காட்சியை நடத்தின. நேற்று முன்தினம் நடைபெற்ற நிறைவு விழாவில் அமைச்சர் செங் கோட்டையன் கலந்துகொண்டு, பேசியதாவது:
கோபியில் நடந்த இஸ்ரோ விண்வெளி கண்காட்சியை மொத் தம் 45 ஆயிரம் பேர் பார்வையிட் டுள்ளனர். கண்காட்சியையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. விஞ்ஞானத் தில் சிறந்து விளங்கும் 100 அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் 100 கல்லூரி மாணவர்கள் என 200 பேர் இஸ்ரோவின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இந்த கண்காட்சியில் நடத்தப் பட்ட ஆன்லைன் தேர்வில் முதல் 2 இடத்தை பிடித்த மாணவி கள் கே.வினோதா, எம்.மகிமா சுவேதா ஆகியோர் இஸ்ரோவில் இருந்து ராக்கெட் ஏவும்போது, அதை நேரிடையாக விஞ்ஞானிக ளுடன் அமர்ந்து பார்க்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இஸ்ரோ உதவி இயக்குநர் கே.பொங்கிணன், வி.ஐ.டி. பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post