Title of the document

ஆசிரியர் தினம் என்பது நமக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் வண்ணமாக கொண்டாடப்படும் நாள் தான் இது. இந்த தினம் உருவாக காரணமாக இருந்தவர், நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான்.

இவரது பிறந்த நாளான செப்.5-ம் தேதியை மாணவர்கள் மற்றும் மாணாக்கர்கள் கொண்டாட வேண்டும் என விரும்பிய போது, அந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, செப்.5 தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நீ சிறகுகளோடு பிறந்திருக்கிறாய்

ஆகவே ஊர்ந்து செல்லாதே

அவற்றை உபயோகப்படுத்து!

கற்றுக் கொண்டு

மேலும் மேலும் பறந்து கொண்டே போ!

நாம் பிறந்தது சிறகுகளோடு, ஆனால், நாம் எவ்வாறு எங்கு பறந்து சென்றால், வெற்றி என்னும் சிகரத்தை அடைய முடியும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்தவர்கள் நமது ஆசிரியர்கள். நம்மை கருவில் சுமந்து பெற்று வளர்த்தது நமது பெற்றோர்களாக இருக்கலாம்.

ஆனால், நம் வாழ்வு வளம் பெற நம்மை சிறந்த சிற்பிகளாக செதுக்கிய, ஆசான்கள் தான் நமது ஆசிரியர்கள். நம்மை பெற்ற பெற்றோருக்கு எவ்வளவு மதிப்பும், மரியாதையும் கொடுக்கின்றோமோ அது போல அவர்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இந்த ஆசிரியர்களின் சிறப்பை உணரும் வண்ணமாக தான் ஒவ்வொரு ஆண்டும் செப்.5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று நமது வளர்ச்சியில், பலரும் பொறாமைப்படுவது உண்டு. ஆனால், அவன்(ள்) வளர்ந்துவிட்டானே என, நமது வளர்ச்சியை கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் நமது ஆசிரியர்கள் மட்டும் தான். இப்படிப்பட்ட நமது ஆசிரியர்களை நமது வாழ்வில், நாம் எந்த உச்சத்திற்கு சென்றாலும் மறக்க கூடாது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post