11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5ஆக குறைக்க முடிவு-அமைச்சர் செங்கோட்டையன்

Join Our KalviNews Telegram Group - Click Here

11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5ஆக குறைக்க முடிவு செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை கொண்டு வந்துள்ளது.

இதிலிருந்து 3 ஆண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது. மாணவா்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும் .தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும், இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5ஆக குறைக்க முதல்வருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சீருடைகள், காலணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்