பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று இட மாறுதல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இன்று, பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், இட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். அதன் முதல் கட்டமாக, இன்று, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் என்ற அடிப்படையில், இட மாறுதல் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திற்குள்ளும், இந்த இட மாறுதல், ஆன்லைன் முறையில் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும், மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.