அரசு பள்ளிகளில் நூலகங்கள் அமைக்க அறிவுறுத்தல்

Join Our KalviNews Telegram Group - Click Hereதமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் நூலகம் அமைக்க பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு படிக்கும் திறனை அதிகரிக்க நூலகங்கள் அமைக்க பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஏற்கெனவே நூலகங்கள் இருக்கும் பள்ளிகளை தவிர பிற மேல்நிலை பள்ளிகளில் நூலகங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தந்த மாவட்ட அதிகாரிகள் பள்ளி முதல்வர்களுடன் கலந்து உரையாடி நூலகம் அமைக்க செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலகம் இல்லாத மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறையை நூலகமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து மேல்நிலை பள்ளிகளின் நூலகத்தில் 1000 புத்தகங்கள் இருக்கவேண்டும் என்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் செய்திதாள்களும் வாங்கி வைத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Annual Status of Education Report (ASER) 2019 அறிக்கையின்படி தமிழ்நாட்டில் கிராமப் புற பகுதிகளில் நூலகம் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை 15.7 சதவிகிதத்திலிருந்து 16.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி கல்வி துறை சார்பில் 6032 மேல்நிலை பள்ளிகளில் நூலகம் ஏற்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்