Title of the document


மத்திய அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 1,351 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும்.

இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்தது. இந்தப் பணியிடங்கள் குறித்த விரிவான விளம்பரம், தேவையான தகுதிகள், விண்ணப்ப முறைகள் போன்ற தகவல்களை ssc.nic.in , sscsr.gov.in  என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post