4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட 37 புதிய அதிரடி அறிவிப்புகளை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டபேரவைக்கூட்ட தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைப்பெற்றது. இந்த கூட்டதொட்ரின் கல்வி மானியக்கோரிக்கை இன்று நடைப்பெற்றது. இந்தநிலையில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டபேரவையில் 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட 37 புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள புதிய 37 அறிவிப்புகள்
1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்
3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.
4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.
6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.
ஆசிரியர் நலன்
7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்.
9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்.
10) சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி
மாணவர் நலன்
11) அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.39.25 கோடி செலவில் கற்றல் துணைக்கருவிகள் வழங்கப்படும்.
12) திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 2.93 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்
13) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவில் மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்
Post a Comment