பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை செஸ் போட்டி - ஆக.2ம் தேதி தொடக்கம்!

Add This Number In Your Whatsapp Groups - 9786053272
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச தரவரிசை  செஸ் போட்டி, ஆக.2ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.காஞ்சி மாவட்ட சதுரங்க சங்கம், சென்னை மாடர்ன் மேனிலைப் பள்ளி இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 12வது சர்வதேச தரவரிசை செஸ் போட்டி நடத்துகிறது. இந்த போட்டி ஆக.2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நங்கநல்லூரில் உளள மாடர்ன் மேனிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.உலக சதுரங்க கூட்டமைப்பு (எப்ஐடிஈ) தரவரிசை பட்டியலில் இடம்பிடிக்க மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்கலாம். முதல் 6 சுற்றுகள் சுவிஸ் ஆட்ட முறையில் நடைபெறும். போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன், கோப்பையும் அளிக்கப்படும். தவிர 8, 10, 12, 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத் தொகையுடன் கோப்பையும் வழங்கப்படும். மேலும், முதல் 25 இடங்கள் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும். இப்படி 1.5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

2300 தரப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகள் பெற்றவர்கள், சர்வதேச மாஸ்டர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்றவர்கள் 750 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணங்களை www.paychessentry.com என்ற இணையதளம் மூலமாக செலுத்தலாம். மேலும் விவரங்கள் அறிய, பள்ளி முதல்வர் மோகனா-97910 22259, சங்க இணை செயலாளர் சந்தானம்-98405 83157 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

Post a Comment

0 Comments