Title of the document

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து பெற்றோர், மாணவர்களிடம் கருத்து கேட்க வேண்டியுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும்பள்ளி திறக்கும் போதே அந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வு அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள்திறந்து 10 நாட்கள் ஆகியும் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த அவர், "அரசு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்க வேண்டியுள்ளது.



பொதுத்தேர்வு முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை கருதுகிறது.
எனவே இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்ட பிறகே பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தேர்வுகள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஒரே தேர்வாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வு முறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? என்ற பரபரப்பில் பெற்றோர்களும், மாணவர்களும் உள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post