Title of the document



மதுரையில் கல்வித்துறை தணிக்கை பிரிவு வழங்கிய தடையில்லா தணிக்கை சான்றுகள் குறித்து 18 மாவட்டங்களில் உண்மைத் தன்மைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது.மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் கல்வித்துறை மண்டல கணக்கு தணிக்கை அலுவலகம் உள்ளது.

இங்கு மதுரை உட்பட 18 மாவட்டங்களின் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் நிதி மற்றும் பணியாளர் நியமனம் சார்ந்து தணிக்கை மேற்கொள்ளப்படும். இங்கு கணக்கு அலுவலர் (ஏ.ஓ.) பணியிடம் காலியாக இருப்பதால் முதன்மைக்கல்வி அதிகாரி (சி.இ.ஓ.)சுபாஷினி கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.மே 31ல் மதுரை உட்பட பல மாவட்டங்களில் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஓய்வு பலன்கள் கிடைக்க 'நிதி சார்ந்த தணிக்கை தடைகள் நிலுவையில் இல்லை' என்ற தடையில்லா சான்று (என்.ஓ.சி.) இந்த அலுவலக கண்காணிப்பாளர் சார்பில் அளிக்கப்பட்டது.இவ்வகை சான்றை ஏ.ஓ. அல்லது பொறுப்பு அதிகாரியான சி.இ.ஓ. தான் வழங்க வேண்டும். ஆனால் விதிமீறி 20க்கும் மேற்பட்ட சான்றுகள் வழங்கப்பட்டதாகவும் இதன் பின்னணியில்பணம் கைமாறி உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சுபாஷினி உத்தரவிட்டார்.

இந்நிலையில் 18 மாவட்டங்களில் 54 டி.இ.ஓ.க்களுக்கு அவர் பிறப்பித்துள்ளஉத்தரவில் 'மே 31க்கு பின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு தணிக்கை தடை இல்லை எனமதுரை அலுவலகம் அளித்த சான்றுகளின் உண்மைத் தன்மையை டி.இ.ஓ.க்கள் கண்டறிந்து அறிக்கை அளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.மே 31ல் ஓய்வு பெற்று தணிக்கை தடை நிலுவை இல்லாத தலைமை ஆசிரியருக்கும் என்.ஓ.சி. வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஓய்வூதிய பலன்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .

நடவடிக்கை பாயுமாஅதிகாரியால் அளிக்கப்படும். தடையில்லா தணிக்கை சான்றை விதிமீறி அலுவலக ஊழியர்களே அளித்துள்ளது உறுதி செய்யப்பட்டும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் 'சம்பவம் குறித்து இயக்குனருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் வழிகாட்டுதல்படி நடவடிக்கை இருக்கும்' என்றார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post