Title of the document


பாட புத்தகத்தில் தேசிய கீதத்தை தவறாக அச்சிட்ட பாடநுால் கழகம், நேற்று அனுப்பிய சுற்றறிக்கையிலும், தேசிய கீத வார்த்தைகளை, சொதப்பலாக அச்சிட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாடபுத்தகத்தில், தேசிய கீதத்தை தவறாக அச்சிட்டதாக, சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியானது.இதை தொடர்ந்து, பாடநுால் கழக மேலாண் இயக்குனர் ஜெயந்தி, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு, நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:ஒன்று, இரண்டு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாட புத்தகத்தில், தேசிய கீதத்தை தவறாக குறிப்பிட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இருந்து, குறுந்தகடு பெறப்பட்டது. அந்த பிழையுடன் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.அதை சரிசெய்து, திருத்திய நகல் இணைக்கப்பட்டுள்ளது. அதை மாவட்ட அதிகாரிகள் வழியாக, பாட புத்தகத்தில் இணைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது..

இந்த சுற்றறிக்கையில், தேசிய கீதத்தில், 10ம் வரியில், 'ஜன கண மங்கள தாயக ஜய ஹே' என்பதற்கு பதிலாக, 'ஜன கண மன அதி நாயக ஜய ஹே' என்ற, வரிகள் இடம் பெற்றுள்ளன.அதிலும், நாயக ஜயஹே என்பதை,'நாயாக ஜய ஹே' என, தவறாக அச்சிட்டுள்ளனர். இதில், தவறான வார்த்தையை அடித்தல் செய்து, சுற்றறிக்கையை, கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post