வெளியானது நீட் தேர்வு முடிவுகள்... தமிழக மாணவர் சாதனை..!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் தேர்ச்சிபெற்றுள்ளார். இது தேர்வு எழுதியவர்களில் 56.50% பேர் ஆவார்கள்.


இதில் தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இது தேர்வு எழுதியதில் 48.57% ஆகும். மாநிலவரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக டெல்லியில் 74.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று வெளியான முடிவுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் தமிழக மாணவர் கர்ணபிரபு 720 க்கு 575 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 5 ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். பொது தேர்வில் ஸ்ருதி என்ற தமிழக மாணவி இந்திய அளவில் 57வது இடம் பிடித்து தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த தேர்வில் 39.56% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments