Title of the document

Tamil kalvi news

தமிழகத்தில் தற்போது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனத்தில் செல்பவர்கள், செல்போன்களில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள், சிக்னலை மீறி வாகனத்தில் செல்பவர்கள் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்து வருகிறார்கள்.


Kalvi news in Tamil
சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்யலாமே? என்று கேள்வி எழுப்பியது. அதன் அடிப்படையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post