Title of the document



பள்ளி மற்றும் கல்லுாரிகளில், வரும், 21ம் தேதி, யோகா தினம் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கோரிக்கைப்படி, உலகம் முழுவதும், ஜூன், 21ல், யோகா தினமாக கொண்டாடுமாறு, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, வரும், 21ம் தேதி, ஐந்தாவது யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், யோகா சிறப்பு நிகழ்ச்சி கொண்டாடுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை, தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை வழியாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அனுப்பப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post