கல்வி கற்க 7 கி.மீ., நடக்கும் மாணவர்கள்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408சூளகிரி அருகே, பஸ் வசதியின்றி, வனப்பகுதிக்கு நடுவே உள்ள சாலையில், தினமும், 7 கி.மீ., நடந்து சென்று, மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, டேம் எப்பளம், ஏரி எப்பளம், கோவில் எப்பளம் கிராமங்களைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், ஏனுசோனையில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.இங்கு பஸ் வசதி இல்லாததால், பெரும்பாலான மாணவர்கள், தினமும் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். 7 கி.மீ., பயணம் செய்தால் தான், பள்ளியை அடைய முடியும். அதுவும், வனப்பகுதிக்கு நடுவே உள்ள சாலையில், மாணவர்கள், அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது.குறைந்தளவு வாகனங்கள் சென்று வரும் இச்சாலையில், மாணவர்களுக்கு, சில நேரங்களில் மட்டும் தான், 'லிப்ட்' கிடைக்கிறது. மாணவியரின் நிலைமை தான், பெரும் திண்டாட்டம். வயது வந்த மாணவியரை, பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் தயங்குகின்றனர். ஆனாலும், கல்வி முக்கியம் என்ற காரணத்தால், வேறு வழியின்றி, சிலர் அனுப்பி வருகின்றனர். மாணவர்கள் செல்லும் இச்சாலையில், யானைகள் நடமாட்டம் உள்ளது. கடந்த ஆண்டு, மூன்று பேர், யானை தாக்கி இறந்துள்ளனர். சூளகிரியில் இருந்து, இவ்வழியில், டவுன் பஸ்களை இயக்கினால், ஏனுசோனை மட்டுமின்றி, பலவதிம்மனப்பள்ளியில் உள்ள, சூளகிரி மாதிரி பள்ளி மாணவ - மாணவியருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.'மாணவர்களுக்கு கல்வியறிவு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, போக்குவரத்து துறை, லாபத்தை பார்க்காமல், டவுன் பஸ்களை இயக்க வேண்டும்' என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.