
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு தேனி ஐ.ஏ.எஸ் அகாடமி கட்டணமில்லா கல்வியகம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு எழுதுபவர்கள் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தேனியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 குரூப் 2, குரூப் 4 , VAO, மற்றும் போலீஸ் தேர்வு, IBPS வங்கித்தேர்வு, TET, TRB போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி கொடுத்து இதுவரை 786 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலும் பல்வேறு அரசு பதவிகளில் உள்ளனர். 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு தேனி ஐ.ஏ.எஸ் அகாடமி கட்டணமில்லா இலவச தொடர் பயிற்சி திறம்பட அளித்து வருகிறது.
தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் அனைவரும் கட்டணமில்லா பயிற்சி பெற 9543064238, 9976626064 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். பதிவு செய்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இவ்வாறு தேனி ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق