Title of the document


சட்டப் பேரவையில் ஜூலை 2ம் தேதி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடப்பதை அடுத்து கல்வி அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்காமல் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டப் பேரவை கூட்டம் 28ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடக்க உள்ளன. அதில் ஜூலை 2ம் தேதி கல்வி மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.

இதையடுத்து, கல்வி அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட உத்தரவு:

நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான கல்வி மானியக் கோரிக்கை ஜூலை 2ம் தேதி நடக்கிறது. கல்வி மானியக் கோரிக்கை தொடர்பான புள்ளி விவரங்கள் அரசிடம் இருந்து கேட்கப்படுவதால் உடனுக்குடன் பதில் அளிக்கும்  வகையில் 29, 30 மற்றும் ஜூலை 1ம் தேதி ஆகிய 3 நாட்களிலும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்  ஆகியோர் தலைமையிடத்தில் இருக்க வேண்டும்.

அனைத்து பணியாளர்களும் விடுப்பில் செல்லாமல் முழுமையாக அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கல்வி இயக்கத்தில்  இருந்து கேட்கப்படும் விவரங்களை  உடனுக்குடன் அனுப்ப வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post