2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியீடு - பாட வாரியாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை விவரம்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.


இந்தத் தேர்விற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது.
பாட வாரியாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை:
தமிழ் 319
ஆங்கிலம் 223
கணிதம் 279
இயற்பியல் 210
வேதியியல் 56
தாவரவியல் 154
விலங்கியல் 144
வரலாறு 104
புவியியல் 11
பொருளாதாரம் 211
வணிகவியல் 99 
அரசியல் அறிவியல் 14
உடற்கல்வியியல் 16
உயிர்வேதியியல் 1
நுண்ணுயிரியியல் 1
மனையியல் 1
இந்திய பண்பாடு 1
என மொத்தம் -2144 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆன்லைன் முறையில் இந்தத் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது.