காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் (11-06-2019)

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

இன்றைய திருக்குறள்*

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

மு.வ உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
🌅🌅🌅🌅🌅🌅🌅
*இன்றைய பொன்மொழி*

உன் சொற்கள் எப்படி இருக்கிறதோ அந்தளவுக்கு நீ மதிக்கப்படுவாய்.

You will get respectas your quality of speech.

✳✳✳✳✳✳✳
*Important Daily Used Words* 

*Profession & Accupation* 
🔮Surveyor - நிலமளப்பவர், அளவையாளர்

🔮Sweeper - துப்புரவாளர்

🔮 Tailor- தையல்காரர்

🔮Teacher- ஆசிரியர் 

🔮 Theologian - பிரம்மஞானி
🎋☘🍀🍂🌿💐🎋
*இன்றைய மூலிகை*

*வசம்பு*

வயிறுதொடர்பான நோய்களைத் தீர்க்கும்

*மஞ்சள்*

கிருமிநாசினி, அழகுபடுத்தல்
🌿🌿🌿🌿🌿🌿🌿

*நூலாசிரியர்கள் - நூல்கள்*

*அறிஞர் அண்ணா*

ஓர் இரவு, நீதித் தேவன் மயக்கம், வேலைக்காரி, ரங்கோன் ராதா, கண்ணீர் துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதி பி.ஏ., தசாவதாரம், நல்ல தம்பி.
🍀🍀🍀🍀🍀🍀🍀
*பொது அறிவு*

1. 2019 மலேசிய ஓபன் டென்னிஸ் பேட்மிண்டன் சாம்பியன்  யார்?

*Tai Tzu- ying*

2) 2019 உலக கோப்பை  டேபிள் டென்னிஸ்க்கு தகுதி பெற்ற இந்திய வீரர் யார்?

*சத்யன் ஞானசேகரன்*

🔡🔠🔡🔠🔡🔠

*Today Grammar*

1. Base Form
"Base Form" என்பது அடிப்படை வினைச்சொற்களாகும். இவைகளே வினைச்சொல் வடிவங்களில் முதன்மையானவை.

எடுத்துக்காட்டாக:

do ,go, play

🧬🧬🧬🧬🧬🧬🧬

*இன்றைய கதை*

*ஆந்தை பெற்ற சாபம்*

 கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள்இ ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லோரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது. 

 நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை. முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள். 

 ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை. அதனால்இ காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவிற்கு வைத்தியம் பார்த்து குணமாகிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால்இ இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டனர். 

 அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார்இ பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார். இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர்இ காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது. 

 அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்இ என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை. 

*நீதி* :
பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.

📫📫📫📫📫📫📫

*🧾செய்திச் சுருக்கம்*

✳ கிரேசி மோகன் மறைவிற்கு முதல்வர்  உட்பட தலைவர்கள் இரங்கல்.

✳ஆந்திர மாநில ஆளுநராக முன்னால் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியமனம்.

✳இந்தியா தாக்குதல் நடத்தும் என  அச்சம். பாகிஸ்தான் பயங்கர வாத முகாம்களை மூடியது.

✳டில்லிக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு, மத்திய அரசு திட்டம்.

✳உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி மழையால் ரத்து.

*தொகுப்பு*

T.THENNARASU,
TN DIGITAL TEAM,
R.K.PET BLOCK
THIRUVALLUR DT.
9600423857

Post a comment

0 Comments