Title of the document
DEO EXAM
மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கு மே 31 முதல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) பதவியில் 20 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல்நிலைத் தேர்வு மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 20,433 பேர் எழுதினர்.

இதிலிருந்து அடுத்த கட்ட தேர்வான முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 1,052 பேர் தகுதிபெற்றுள்ள னர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத் தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையத்தில் மே 31 முதல் ஜூன் 14 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். முதன்மைத் தேர்வு ஜூலை 27 முதல் 29-ம் தேதி 3 நாட்கள் நடைபெறும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post