அரசு பள்ளிகளை காக்க விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தும் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்


தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு பள்ளிகளில் படித்து தொழில்அதிபராக உள்ளவர்கள், பொருளாதரத்தில் உயர்ந்துள்ளவர்கள். உயர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அரசு பள்ளிகளை காக்க இப்படி பலகட்ட முயற்சிகள் எடுத்துவந்த நிலையில் புதுச்சேரியிலுள்ள அரசு பள்ளியில் 30 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி புதுச்சேரி அரசின் கலைமாமணி மற்றும் சிறந்த நல்லாசிரியர் விருது பெற்ற ரெ.ரவி (63) ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு சென்று அரசு பள்ளிகளின் சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறார்.

இதற்கென்று அவர் பணம் கேட்பது இல்லை. இது அனைவரின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பள்ளியின் சுவற்றில் ஓவியம் வரையும் போது ஓவியத்தை பார்க்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சாலையில் செல்லுபவர்கள் இதுகுறித்து விசாரித்து ஓவியம் வரைய பெயிண்ட் உள்ளிட்ட சிறு உதவிகளை தானக முன்வந்து செய்து வருகிறார்கள்.

 சிதம்பரம் நகரம் மனாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி சுவற்றில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துகொண்டிருந்த அவரிடம் பேசினோம். நான் ஓய்வு பெற்றவுடன் ஓவிய ஆசிரியரான எனது மனைவி காந்திமதியுடன் இணைந்து 60 மாணவர்களை கொண்டு ஓவிய பயிற்ச்சி பள்ளியை தொடங்கினேன். அதேநேரத்தில் தனியார் பள்ளிகளின் மோகம் அதிகரித்துள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதை எண்ணி வருத்தபட்டுள்ளேன். இதனால் ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் கடனவுடன வாங்கி தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை கண்கூடாக பார்த்தேன். இதனால் வேதனையடைந்த நான் ஓவிய பயிற்ச்சி பள்ளியை கலைத்துவிட்டு எனது மனைவி மற்றும் என்னுடன் பணியாற்றிய 15 ஓவிய ஆசிரியர்களை கொண்டு சன் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் மற்றும் வாசகங்களை எழுதி வருகிறோம்.