Title of the document

அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போல் அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு: படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு திட்டம்

*அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் போல், அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை விரைவில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது*

*கடந்த 2014-ம் ஆண்டு மோடிதலைமையிலான பாஜக ஆட்சிக்குவந்ததும், மத்திய அரசு அலுவலகங்களில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன*

*குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு எதிர்ப்பு வந்தாலும் பின்னர் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்*

*இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது*

*ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் இதர துறைகளின் தலைமை அலுவலகங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது*

*அதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுஅலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது*

*தொடர்ந்து, கடந்த2017-ம் ஆண்டு டிசம்பரில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை*

*அதேநேரம், பதிவுத்துறை தலைவர் அலுவலகம், டிஎம்எஸ் உள்ளிட்ட சில முக்கிய துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது*

*இந்நிலையில், தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது*

*வரும் ஜுன் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது*

*இதற்கிடையே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு, ஊதியம் சர்வீஸ் ஃபைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழுவீச்சில் தற்போது நடந்து வருகின்றன*

*இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது*

*இதன் ஒரு பகுதியாக வருகைப்பதிவேடு, விடுமுறை உள்ளிட்டவற்றையும் ஒருங்கிணைக்க, பயோமெட்ரிக் முறையை அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது*

*அரசின் வரவு - செலவு மற்றும் அரசு ஊழியர்களின் பணி விவரம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நேரத்தில் அறியும் வகையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது*

*இதில் டிஜிட்டல் கையொப்பம், பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்றபாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகிறது*

*இதில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஆசிரியர்களைப் போல் அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. துறைகள்வாரியாக இதற்கான பணிகள் நடந்து வருகின்றன*

*தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் நடைமுறைப்படுத்துவது சிரமம் என்பதால் படிப்படியாக கொண்டு வரப்படும்*

*தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த வருகைப்பதிவேடு முறை அமலில் உள்ளது. கணினி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பயோமெட்ரிக் முறை காலத்தின் கட்டாயம்*

*இதற்கிடையே, வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலர்களில் பலர் களப்பணியாளர்களாக இருப்பதால், பயோமெட்ரிக் வருகைப்பதிவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இவற்றையும் கருத்தில் கொண்டே நடைமுறைப்படுத்தப்படும்*

*இவ்வாறு அவர் கூறினர்*

*🌐🌐வருகையில் முரண்*

*அரசு ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும்*

*இவர்களுக்கு காலையில் 10.10 மணிவரை வேலைக்கு வர சலுகை உள்ளது, மாதம் 2 நாட்கள் தலா 1 மணி நேரம் 'பெர்மி‌ஷன்' கொடுக்கப்படுகிறது*

*காலம் தாழ்த்தி வந்தால் 'பெர்மி‌ஷனில்' கழித்துக் கொள்ளலாம். அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும்*

*ஆசிரியர்களைப் பொறுத்தவரை காலை 9.20 முதல் 4.10 மணிவரை பணி நேரம்*

*ஆனால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது*

*அதற்காகவே பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை அரசுஅமல்படுத்த நடவடிக்கை எடுத் துள்ளதாகக் கூறப்படுகிறது*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post