Title of the document

சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க நடவடிக்கை... பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

*தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது*

*விண்ணப்பதிவு தொடங்கிய ஏப்ரல் 22-ம் தேதி முதல் தற்போது வரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 1.43 இடங்களுக்கு விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது*

*விருப்பம் உள்ளவர்கள் மே 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் இலவச கட்டாய கல்வி வழங்க மத்திய அரசின் சட்டம் வழிவகுக்கிறது*

*மேலும சி.பி.எஸ்.இ. பள்ளிகளை இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைக்கப்பட்ட உடன் அதிலும் விருப்பம் உள்ளவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது*

*சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது*

*சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நேரில் சென்றும், கல்வி அலுவலகம் மூலமாகவும், ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என்றும், தனியார் பள்ளிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 25% ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க கட்டாய கல்வி சட்டம் வழிவகுக்கிறது*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post