அரசு இசைக்கல்லுாரியில் உதவித்தொகையுடன் சேர்க்கை

அரசு இசைக்கல்லுாரியில் உதவித்தொகையுடன் சேர்க்கை

*மதுரை அரசு இசைக்கல்லுாரியில் ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் உடன் கூடிய பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு சேர்க்கை நடக்கிறது.மூன்று ஆண்டுகள் பட்டயப்படிப்புகளான இசைக்கலைமணி பிரிவில் குரலிசை, வயலின், வீணை, புல்லாங்குழல், வாத்திய கலைமணியில் மிருதங்கம், நாதஸ்வரம், தவில், ஆடல் கலை மணியில் பரதம், கிராமிய கலைமணியில் நாட்டுப்புறக்கலைகள் கற்றுத்தரப்படுகின்றன*

*🌐🌐கல்வித்தகுதி*

*பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பி.ஏ., மியூசிக்கில் குரலிசை பட்டப்படிப்பு படிக்க பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்*

*ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இசைக் கலைமணி அல்லது பி.ஏ., மியூசிக் முடித்திருக்க வேண்டும். மாலை நேர இசைக்கல்லுாரியிலும் சேரலாம்*

*மேலும் விபரங்களுக்கு 94863 74960ல் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் டேவிட் தெரிவித்துள்ளார்*