Title of the document

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

*நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. அதில் 27 லட்சம் பேர் தேர்வு எழுதினர்*

*தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்நிலையில்  சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது*

*சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.85% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதல் இடத்திலும்; 99% தேர்ச்சியுடன் சென்னை 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்*

*சிபிஎஸ்இ இணையதளங்களின் முகப்பு பக்கத்தில் ‘‘பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2019’’ என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.அதைத்தொடர்ந்து மாணவர்களின் பதிவு எண், பள்ளி ரோல் நம்பர், ஹால்டிக்கட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை பதிவேற்றம் செய்து சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து மாணவரின் தேர்வு முடிவு  திரையில் தோன்றும். அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post