ஆசிரியர் காலிப்பணியிடம் சேகரிப்பு: கல்வித்துறை நடவடிக்கையால் எதிர்பார்ப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

அரசுப்பள்ளிகளில் ஜூன், 1 நிலவரப்படி, ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து, விபரம் சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஏற்கனவே ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டதாலும், அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே செல்வதாலும், 8,000 ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக இருந்தன.

இதனால், காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை உபரி பணியிடங்களாக கருதி, அவற்றை நீக்கம் செய்தும், பணிநிரவல் செய்தும் கல்வித்துறை சமாளித்து வந்தது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் மே, 31ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால், காலிப்பணியிடங்கள் உருவாகின்றன.

இதை கணக்கிட்டு, காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் நாகராஜமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதனால், புதிதாக ஆசிரியர் நியமனம் நடத்தப்படுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: 

நடப்பு கல்வியாண்டிலும், உபரி ஆசிரியர் பணியிடங்களை விட, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை. இதனால், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களில், புதிய நியமனம் இருக்க வாய்ப்பில்லை. இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, இந்த விபரங்கள் தேவைப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Post a comment

0 Comments