தபால் ஓட்டுகள்: ஆசிரியர் சங்கம் மனு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

தபால் ஓட்டுகள்: ஆசிரியர் சங்கம் மனு

*லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, இதுவரை தபால் ஓட்டுகள் கிடைக்கவில்லை' என, தலைமை தேர்தல் அதிகாரியிடம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர், தியாகராஜன் மனு அளித்துள்ளார்*

*மனுவில், அவர் கூறியிருப்பதாவது*

*ஏப்., 18ல் நடந்த லோக்சபா தேர்தல் பணியில், நான்கு லட்சத்திற்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்*

*அவர்களில் பலருக்கு, இன்னும் தபால் ஓட்டு வழங்கப்படாமல் உள்ளது. சிலருக்கு தபால் ஓட்டு, வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டு, முகவரி தவறு என, திருப்பி அனுப்பப்பட்டுள்ளது*

*கிடைக்கப் பெறாதவர்கள், தாசில்தாரிடம் சென்று, தபால் ஓட்டு வழங்கும்படி முறையிட்டு வருகின்றனர்; அதற்கு பலன் கிடைக்கவில்லை*

*சில இடங்களில், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, தபால் ஓட்டு பெட்டிகள், 'சீல்' இடப்படாமல் இருந்தன*

*இதனால் பலர், தங்கள் தபால் ஓட்டுகளை செலுத்தாமல் உள்ளனர். தற்போது, 'தபால் ஓட்டுகளை, தபாலில் தான் செலுத்த வேண்டும்' என, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது*

*எனவே, முன்பிருந்த முறைப்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில், தபால் ஓட்டுகளை செலுத்த, ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது*

Post a comment

0 Comments