Title of the document

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு: 76 இடங்கள் நிரம்பவில்லை

*முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் 76 இடங்கள் இன்னும் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது*

*தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன*

*இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கானவை*

*அவை தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 181 இடங்கள் உள்ளன*

*இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை நடைபெற்றது*

*அதில், 999 இடங்கள் நிரம்பின*

*இந்த நிலையில், முதல்கட்ட கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள், கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்கள் என மொத்தம் 800 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது*

*அதில், 76 இடங்கள் இன்னும் நிரம்பாமல் உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககத் தகவல்கள் தெரிவிக்கின்றன*

*அவை அனைத்தும்,நான்-கிளீனிக்கல் எனப்படும் மயக்கவியல், உடற்கூறியல் போன்ற படிப்புகளுக்கான இடங்கள் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது*

*அவற்றில், அரசு கல்லூரிகளில் 6 இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 36 இடங்களும் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது*

*அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 34 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிகிறது*

*இதற்கான சிறப்பு கலந்தாய்வு அடுத்த வாரம் நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத் தேர்வுத் துறை கூடுதல் இயக்குநர் செல்வராஜ் கூறியுள்ளார்*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post