Title of the document

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, நாடு முழுவதும், மார்ச்சில் முடிந்தது. விடைத்தாள் திருத்தம் முடிந்து, இறுதி கட்ட சரிபார்ப்பு பணிகளும் முடிவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகும் என, பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது. தேர்வு முடிவுக்காக, நேற்று காலை முதல், மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால், 'ரிசல்ட்' வெளியாகவில்லை.

இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, சி.பி.எஸ்.இ., வாரியம், நேற்று பகலில், அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை குறிப்பிடவில்லை. ஆனால், 'தேர்வு முடிவு வெளியாவதற்கான தேதியை, விரைவில், சி.பி.எஸ்.இ., அறிவிக்கும்' என, அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, பெற்றோர் கூறுகையில், 'மாநில பாடத்திட்டத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டு, பிளஸ் 1 சேர்க்கை நடந்து வருகிறது. பல மாணவர்கள், பிளஸ் 1க்கு, மாநில பாடத் திட்டத்துக்கு மாற முடிவு செய்துள்ளனர். 'ஆனால், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வராததால், பிளஸ் 1 சேர்க்கைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது' என்றனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post