சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் ரத்து செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு


சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே முட்டை கொள்முதல் அரசாணைக்கு உயர்நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு இடைக்கால தடை விதித்தது.

முட்டை கொள்முதல் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மகாதேவன், அரசாணை முறையாக இல்லை என்று கூறி அதை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில், சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பாக சமூக நலத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு மீதான விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Post a Comment

0 Comments