Title of the document

நீட் தேர்வு: பயிற்சி வகுப்புகளை தொடங்க அரசுக்கு வேண்டுகோள்

*அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், சிறப்புப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது*

*இதுகுறித்து,  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்தர்நாத் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது*

*தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்து 15 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை மாநில அரசு தொடங்கவில்லை*

*கடந்த ஆண்டில் 1,300 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும், அவர்களில் பலர் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை*

*மூன்று பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. அந்த நிலை நிகழாண்டிலும் தொடராமல் இருக்க வேண்டுமானால், உடனடியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றார் அவர்*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post