Title of the document

முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை. முடிவு

*அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ. உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வை நடத்த அந்தப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது*

*நிகழாண்டு முதல் அந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன*

*எம்பிஏ, எம்சிஏ, எம்.டெக், எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர இதுவரை டான்செட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறும்*

*அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.வழக்கம்போலவே நிகழாண்டும், டான்செட் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என எதிர்பார்த்து வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் கொள்கை முடிவு ஒன்றை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின*

*அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலைப் படிப்புகள் அனைத்துக்கும் டான்செட் தேர்வுக்கு பதிலாக தனி நுழைவுத் தேர்வு நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது*

*அதேவேளையில், மற்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு எத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை*

*இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது*

*அண்ணா பல்கலைக்கழகம் தனி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகளை எங்களால் எடுக்க இயலும்*

*பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மே மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான பேராசிரியர்களின் கருத்து*

*அப்போதுதான் தகுதியான மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்க முடியும். இல்லையெனில், அவர்கள் வேறு கல்வி நிறுவனங்களைத் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டே தனி நுழைவுத் தேர்வு முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post