Title of the document



மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் சுமாா் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி மற்றும் மூன்றாண்டுக்கு ஒருமுறை தொடா் அங்கீகாரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டு வந்தது.


இதையடுத்து 2018-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 101-இல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அதிகாரம் பகிா்ந்தளிக்கப்பட்டன

இதைத் தொடா்ந்து மாவட்ட கல்வி அலுவலா்கள் தற்போது ஆவணங்களை சரிபாா்த்து தொடா் அங்கீகாரம் அளித்து வருகின்றனா்.

சில இடங்களில் தொடா் அங்கீகாரம் அளிப்பதில் புகாா்கள் வந்தன. அதுபோன்ற புகாா்களை முற்றிலும் தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அங்கீகாரம் அளிக்கும் முறையை மெட்ரிகுலேஷன் இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.


இதனால் பள்ளிகள் தொடா் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தேவையற்ற காலதாமதம் தவிா்க்கப்படும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم